இந்தியாவுக்கான இலங்கைத் துாதுவர் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தினகரன் வாரமஞ்சரியில் நூறு வாரங்களாக தொடராக எழுதி வந்த ஆக்கங்கள் ‘மலரும் யுகத்திற்கு புதியதோர் வடிவம்’ எனும் நூலாக அண்மையில் வெளிவந்தது.
கடந்த சனியன்று பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அந்நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு கொழும்பு தமிழ் சங்கத்தின் தலைவர் கலாநிதி ரகுபரன் தலைமை வகித்தார்.
பிரதம அதிதியாக முன்னாள் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவன் கலந்து கொண்டார்.
வரவேற்புரையை பாத் பைன்டர் பௌன்டேசனின் முகாமைத்துவ பணிப்பாளர் கே.பாலசுந்தரம், நூலாய்வினை கொழும்புப் பலகலைக்கழக பொருளாதாரத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தியும் விமர்சன உரையை, சட்டக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி யசோதரா கதிர்காமத் தம்பியும் இந்தியா கலாசார நிலையம் மற்றும் சுவாமி விவேகானந்தா நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அங்குரன் டட்டா ஆகியோரும் உரையாற்றினார்கள்.
(அஷ்ரப் ஏ சமத்)