பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான ‘சிசு செரிய’ அரச மானிய பஸ் சேவைக்காக 500 புதிய பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதற்கான உத்தரவை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு விடுத்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 811 பஸ் வண்டிகள் மற்றும் 726 தனியார் பஸ் வண்டிகள் உட்பட 1,537 பஸ் வண்டிகள் மாணவர்களின் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றன.
இதற்கென, 2024இல்,2,000 மில்லியன் ரூபாவை மானியமாக அரசாங்கம் வழங்குகிறது.
போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால், மாணவர்களின் பாவனைக்கு இன்னும் அதிக பஸ்வண்டிகள் தேவைப்படுகின்றன.இதற்காகவே இச்சேவையில் புதிதாக 500 பஸ்வண்டிகள் இணைக்கப்படவுள்ளன. மாகாணங்களின் பிராந்திய அபிவிருத்திக் குழு தலைவர்கள் இதற்கான முன்மொழிவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளனர்.மாணவர்களுக்கான இந்த பஸ்வண்டி சேவைகள் 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.