ஜா-எல Viman மாதிரி தொடர்மாடிக் குடியிருப்புத் திட்டத்தைப் பார்வையிடுவதற்கு DFCC வங்கியின் வாடிக்கையாளர்களை அழைத்ததன் ஊடாக John Keells Properties நிறுவனம் DFCC வங்கியுடனான தனது கூட்டாண்மையை மேலும் பலப்படுத்தியுள்ளது. இந்த மூலோபாயக் கூட்டாண்மையின் ஊடாக Viman திட்டத்தில் தங்களுடைய கனவு இல்லத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்திருக்கும் எதிர்கால வீட்டு உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு கட்டாயமான வாய்ப்பை உருவாக்குவதற்கு DFCC வங்கி கவர்ச்சிகரமான வீட்டு அடமானத் தீர்வுகளை விரிவுபடுத்துகின்றது.
வொக்ஸ்ஹால் வீதி, கொழும்பு 02 என்ற முகவரியில் அமைந்துள்ள John Keells Properties நிறுவனத்தின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜா-எல Viman குடியிருப்புத் திட்டத்தின் மாதிரி தொடர்மாடியில் தனித்துவமான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது. வீட்டின் உரிமையை சுமுகமான முறையில் பெற்றுக் கொள்ளக் கூடிய தனிப்பயனாக்கப்பட்ட அடகுத் தீர்வுகள் உள்ளிட்ட இத்திட்டத்தில் காணப்படும் நன்மைகளைப் புரிந்துகொள்ளும் நோக்கில் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனுபவம் மிக்க விற்பனைக் குழுவினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். பெறுமதிமிக்க இந்தக் கலந்துரையாடல் மூலம் வாடிக்கையாளர்கள் இத்திட்டம் குறித்து சரியான புரிதலையும், இதனால் வழங்கப்படும் தனித்துவமான வசதிகள் பற்றியும் அறிந்துகொண்டனர்.
வங்கியின் ரீடெய்ல் மற்றும் சிறிய நடுத்தர தொழில்முயற்சிப் பிரிவுக்கான தலைவரும், சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஆசிரி இத்தமல்கொட குறிப்பிடுகையில், “முதலீட்டுக்கான உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பு என்பதே எதிர்காலத்தில் வீட்டில் முதலீடு செய்ய விரும்பும் வீட்டு உரிமையாளர்களின் முக்கிய விடயமாகும் என்றார்.