இலங்கை டயர் சந்தையின் நம்பிக்கை மிக்க வர்த்தக நாமமான DSI Tyres நிறுவனம் இலங்கை சந்தைக்கு வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ள Hankook ரேடியல் டயர்களை உள்நாட்டுச் சந்தையில் மேலும் உறுதியாக நிலைநிறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. உலகப் புகழ் பெற்ற Hankook டயர் விற்பனை முகவர்களையும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களையும் கௌரவிக்கும் வைபவமொன்றை DSI Tyres நிறுவனம் அவுங்கல்ல RIU ஹோட்டலில் வெகு விமரிசையாக நடாத்தியுள்ளது. இதன் போது DSI Tyres நிறுவனத்துடன் இணைந்து Hankook டயர்களை உள்நாட்டுச் சந்தையில் விநியோகிப்பதற்கு முதன்மை பங்களிப்பை வழங்கிய விற்பனை முகவர்களை கௌரவிக்கும் முகமாக Hankook நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் DSI Tyres நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆகியோர் கையொப்பமிட்ட விஷேட சான்றிதழ்களும் அதிகாரம் பெற்ற விற்பனை முகவர்களுக்கு வழங்கப்பட்டன. உத்தரவாதத்துடனும் நம்பிக்கையுடனும் Hankook டயர்களை கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலான அறிவுறுத்தல்களும் விற்பனை முகவர்களுக்கு வழங்கப்பட்டன.
உள்நாட்டு டயர் சந்தையில் முதன்மையானதும் நம்பிக்கை மிக்கதுமான வர்த்தகநாமமான DSI Tyres நிறுவனத்தின் நிர்வாகத்தின் ஊடாக Hankook டயர்களை விநியோகித்தமை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் விற்பனையையும் அதிகரிப்பதற்கு ஏதுவாக உள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த விற்பனை முகவர்கள் தெரிவித்தனர்.