இலங்கையில் பல்வேறு துறைகளில் வியாபார ஈடுபாட்டைக் கொண்ட முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றும், பவர் என அறியப்படும் ஏ.பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட், தனது பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராக நிஷாந்த வீரசிங்கவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. சுகாதார பராமரிப்பு பிரிவின் பணிப்பாளராக இவர் தொடர்ந்தும் இயங்குவார்.
தமது புதிய நிலையில், நிறுவனத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு அவசியமான வழிகாட்டல்களை தமது பரந்த அனுபவம் மற்றும் மூலோபாய நோக்கை பிரயோகித்து வழங்குவார். பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் விவசாய பணிப்பாளராக பணியாற்றும் ஜானக குணசேகரவுடன் இவர் இணைந்து செயலாற்றுவார். பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்களாக வீரசிங்க மற்றும் குணசேகர ஆகியோர் பவர் நிறுவனத்தின் தலைமைத்துவத்தை மேலும் வலிமைப்படுத்துவர்.
பவர் நிறுவனத்தின் சுகாதார பராமரிப்பு பிரிவை இலங்கை சந்தையில் கீர்த்தி மிக்க, துரித முன்னேற்றத்துக்கு உட்படுத்தி, தொழிற்துறையின் முன்னணி மூன்று நாமங்களில் ஒன்றாக திகழச் செய்வதில் வீரசிங்க முக்கிய பங்காற்றியிருந்தார்.
மருந்துப் பொருட்கள், மருத்துவ சாதனங்கள், இனங்காணல்கள் மற்றும் போஷாக்கு ஆகிய பிரிவுகளில் பரந்தளவு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இந்தப் பிரிவு வழங்குகின்றது.
அவரின் தலைமைத்துவத்தின் கீழ், சர்வதேச ரீதியில் சுகாதார பராமரிப்புத் துறையில் புகழ்பெற்ற நாமங்களான GSK, Sanofi, J&J (specialty care), Takeda (vaccine), Covidien மற்றும் Fresenius Medical Care போன்றவற்றுடன் இணைந்து, இந்தப் பிரிவு பல்வேறு புத்தாக்கமான மற்றும் உயிர் காக்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வெற்றிகரமாக அறிமுகம் செய்திருந்தது.