நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தனது “கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்பாற்பட்ட உறவு” 2024 திட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் வெற்றிகரமாக அமைந்திருந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் திட்டத்தினூடாக, வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு பண அனுப்புகை அனுபவத்தை மேம்படுத்தி, முன்னைய சாதனைகளை விஞ்சுவதற்கு எதிர்பார்த்துள்ளதுடன், வெளிநாடுகளில் வசிக்கும் அன்புக்குரியவர்களுடன் உறுதியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் எதிர்பார்க்கின்றது.
தொடர்ச்சியாக 12 வாரங்களுக்கு, ஒவ்வொரு வாரமும் தெரிவு செய்யப்படும் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு ஸ்மார்ட் தொலைபேசியை வழங்கவுள்ளது. அதனூடாக வெளிநாடுகளில் வசிக்கும் தமது அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும். இந்த நடவடிக்கையினூடாக வளர்ச்சியை ஊக்குவித்து, வெளிநாட்டு பண அனுப்புகை தொடர்பான வங்கியின் இலக்குகளையும், நாட்டின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.வாராந்த வெற்றியாளர் தெரிவில் பங்கேற்பதற்கு, வாடிக்கையாளர்கள் ஆகக்குறைந்தது ரூ. 50000 பெறுமதியான வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கலை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியினூடாக அனுப்பி பெற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலும், வெற்றியாளர் தெரிவுக்கான ஒவ்வொரு அனுமதியைப் பெறும். அதனூடாக வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியான பரிசுகளை வெற்றியீட்டுவதற்கும், வங்கியின் தங்கியிருக்கக்கூடிய மற்றும் வினைத்திறனான பண அனுப்புகை சேவைகளை அனுபவிக்கவும் உதவியாக அமைந்திருக்கும்.