இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் வடிவமைப்பாளரான Prime Lands Residencies PLC, தனது ‘The Colombo Border,’ திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளது. நகர வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமையவுள்ள இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் பெருமளவான குடிமனைகள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், தற்போது இரண்டாம் கட்டத்தை அறிமுகம் செய்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் பைலிங் பணிகளை நிர்மாணத் துறையின் புகழ்பெற்ற நாமமான San Piling முன்னெடுத்து வருகிறது. இது திட்டம் தொடர்ந்து முன்னேறி வருவதற்கான அறிகுறியாகவும் திகழ்கிறது.
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள இந்த ‘The Colombo Border’ திட்டத்தினூடாக, கொழும்பினை அண்மித்த பேலியகொட பகுதியிலிருந்து சில நிமிடங்களில் கொழும்பு நகரை சென்றடைய முடியும் என்பதுடன், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் களனி வெலி புகையிரத நிலையம் ஆகியவற்றுக்கும் சில நிமிடங்களில் பயணிக்க முடியும். இதனூடாக, கொழும்பு மத்தி மற்றும் அண்மித்த பகுதிகளை தனிப்பட்ட மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி துரிதமாக சென்றடையக்கூடியதாக இருக்கும்.