இலங்கையில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வண்டிகள் துறையில்; உலகளாவிய ரீதியில் முன்னணியாகத் திகழும் வாகனத் தயாரிப்பாளரான TVS Motor Company (TVSM) தனது உயர்மதிப்புக் கொண்ட TVS iQube மின்னியல் ஸ்கூட்டரை இலங்கையில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
TVSM நிறுவனத்தின் உறுதியான மற்றும் நம்பகமான பொறியியல் திறமையின் ஆதரவுடன் TVS iQube மின்னியல் ஸ்கூட்டர் முன்னணியான செயல்திறன், சௌகரியம், உருவாக்கத்தரம், நீடிக்கும் தன்மை மற்றும் பாதுகாப்பு என்பவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் தான் கொண்டுள்ள பிரசன்னம் மற்றும் இருசக்கரவண்டிகள் துறையில் 38% சந்தைப் பங்கின் உரிமையாளர் என்ற சிறப்பின் ஊடாக TVS Lanka Pvt. Ltd நிறுவனம் ஏற்படுத்திக் கொண்டுள்ள நன்கு விஸ்தரிக்கப்பட்ட விற்பனைக்குப் பின்னரான சேவையுடனேயே இந்தத் தயாரிப்பு அறிமுகப்படுத்தப்படுகின்றது.
TVS iQube மின்னியல் ஸ்கூட்டர் ஒப்பிடமுடியாத செயல்திறன் மற்றும் அறிவார்ந்த இணைப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. 125 CC ஸ்கூட்டருக்கு இணையான அதிகூடிய 4.6 KW வலுசக்தியைக் கொண்ட TVS iQube ஸ்கூட்டர் 4.2 செக்கனில் 0-40 ; km/h வரை வேகத்தை அதிகரிக்கக் கூடியது. மேம்பட்ட லித்தியம்-அயன் பற்றரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்களின் மனதை திருப்திகொள்ளவைக்கும் வகையில் இவ்வாகனம் நீண்ட பற்றரி ஆயுளைக் கொண்டுள்ளது. லித்தியம் – அயன் பற்றரிகள் மீழ்சுழற்சிக்கு உட்படுத்தப்படக் கூடியவை என்பதால் குறைந்தபட்ச சூழலியல் தாக்கத்தையே ஏற்படுத்தும்.