இலங்கையின் முன்னணி வைத்திய முற்பதிவு கட்டமைப்பும், SLT-MOBITEL இன் துணை நிறுவனமுமான eChannelling, ஐக்கிய இராஜ்ஜியம், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கான புலம்பெயர்வுகளுக்கு அவசியமான சுகாதார மதிப்பாய்வுகளை மேற்கொள்வதற்கான இலவச ஒன்லைன் முற்பதிவுகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக International Organization for Migration (IOM) ஸ்ரீ லங்கா உடன் கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
புலம்பெயர்வோர் மற்றும் பயணங்களை மேற்கொள்வோருக்கு அவசியமான, பயனளிக்கும் பரிபூரண சுகாதார மதிப்பாய்வுகளை IOM வழங்குகின்றது. இந்த புதிய பங்காண்மையினூடாக, புலம்பெயர்வோருக்கு தமது IOM சுகாதார மதிப்பாய்வு முற்பதிவுகளை ஒன்லைனில் eChannelling இன் இணையத்தளமான https://www.echannelling.com/ ஊடாக அல்லது eChannelling மொபைல் app ஊடாக மேற்கொள்ள முடியும்.
eChannelling மற்றும் IOM இடையிலான கைகோர்ப்பினூடாக, இடையீட்டாளர்களின் தலையீடின்றி புலம்பெயர்வதற்கு எதிர்பார்ப்போருக்கு தமது மருத்துவ பரிசோதனை முற்பதிவுகளை இலவசமாக முற்பதிவு செய்து கொள்ளும் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட செயன்முறையினூடாக புலம்பெயர்வோருக்கு தமது பிரயாணத்துக்கு முன்பாக சுகாதார பரிசோதனை சேவைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் வழங்கப்படுகின்றன.
IOM இன் புலம்பெயர் சுகாதார பிரிவினூடாக, இலங்கையில் 2014ஆம் ஆண்டு முதல் விசேடத்துவமான சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனுபவம் வாய்ந்த ஊழியர்களினூடாக, உயர் தரம் வாய்ந்த சேவைகள் நிபுணத்துவமான முறையிலும், வினைத்திறனான முறையிலும் வழங்கப்படுகின்றன.