Home » பாதுகாப்பான மற்றும் விசாலமான 2024 Nissan Urvan NV350 ஐ அறிமுகப்படுத்தும் AMW

பாதுகாப்பான மற்றும் விசாலமான 2024 Nissan Urvan NV350 ஐ அறிமுகப்படுத்தும் AMW

by Damith Pushpika
June 2, 2024 7:03 am 0 comment

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) கீழ் பயணிகள் போக்குவரத்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவையின் அண்மைய தீர்மானமானது, சுற்றுலாத் துறை தொடர்பான முக்கியமான முன்னேற்றமாக அடையாளம் காணப்படுகிறது.

அந்த வகையில், Associated Motorways (Private) Limited நிறுவனமானது, 2024 NISSAN Urvan NV350 எனும் 16 ஆசனங்களைக் கொண்ட, அகலமான இட வசதியைக் கொண்ட, High roof Micro bus வாகனத்தை இறக்குமதி செய்து வழங்குகிறது. குறிப்பாக 16 — 30 ஆசனங்களைக் கொண்ட இது mini-coach வகையைச் சேர்ந்ததாகும். 2024 Nissan Urvan NV350 ஆனது, இலங்கைக்கான சிறந்த தெரிவாகவும், இலங்கை சுற்றுலாவிற்கு ஏற்ற தெரிவாகவும் அடையாளம் காணப்படுகின்றது. இந்த வாகனமானது, ஆசனங்களின் திறன் மற்றும் தரநிலைகள், அரசாங்கத்தின் அனுமதிப்பத்திரத்திற்கு அவசியமான அம்சங்களை பூர்த்தி செய்வதோடு, Nissan Motor Corp நிறுவனம் வழங்கும் உற்பத்தி நிறுவனத்தின் உத்தரவாதத்தையும் கொண்டுள்ளது.

2024 Nissan Urvan NV350 வாகனம், கால்களை வைக்க போதுமான வசதியையும், தலைக்கும் கூரைக்கும் இடையிலான இடவசதியையும் கொண்டுள்ளதன் மூலம், ஒவ்வொரு பயணத்தையும் பயணிகளுக்கு வசதியானதாக ஆக்குகின்றது. அதன் மாற்றியமைக்கூடிய கட்டமைப்பு மூலம், பயணிகளுக்கு வசதி மற்றும் சொகுசு ஆகிய இரண்டையும் உறுதி செய்யும் வகையில், பயணப் பொதிகளை வைப்பதற்கான இடத்தை தடையின்றி வழங்குகிறது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division