இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ‘எங்கள் தேசம் மற்றும் கோளுக்கான காலநிலை நடவடிக்கை’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை காலநிலை உச்சி மாநாட்டில் இணை அனுசரணையாளராக தீவிரமாக பங்குபற்றியதன் மூலம் NDB வங்கி நிலைத்தன்மைக்கான தனது அர்ப்பணிப்பினை மீள உறுதிப்படுத்தியுள்ளது.
மே 7 முதல் 9 வரை நடைபெற்ற இந்த உச்சிமாநாடு, பணிப்பாளர் சபை மட்டத்தில் காலநிலை நடவடிக்கைகளை ஊக்குவித்தல் மற்றும் தேசிய மற்றும் பெருநிறுவன காலநிலை நடவடிக்கைகளை எளிதாக்கும் கொள்கைகளில் பங்குதாரர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
ஒரு முன்னணி நிதி நிறுவனமாக, காலநிலை மாற்றம் மற்றும் சமூகங்கள் மற்றும் வர்த்தக செயற்பாடுகளில் அதன் தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான அவசரத் தேவையை NDB உணர்ந்துள்ளது. உச்சிமாநாட்டில் வங்கியின் பங்கேற்பானது, நிலையான நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இந்த உச்சிமாநாட்டில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளையும் சேர்ந்த வல்லுநர்கள் உள்ளடங்கலாக 60க்கு மேற்பட்ட பேச்சாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் காலநிலை நெருக்கடியில் உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியிலான பாதிப்புகள், வர்த்தக செயற்பாடுகளில் ஏற்படும் இடர்கள், காலநிலை மீள்தன்மை, கார்பன் நீக்கம் போன்ற முக்கியமான தலைப்புகளில் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.