கொமர்ஷல் வங்கியின் LEAP Global Linker தளத்தின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் (SMEs) ஆற்றல்களை மேம்படுத்துவதற்காக Q&E நிறுவனத்துடன் மூலோபாய பங்காளித்துவம் ஒன்றை ஏற்படுத்தியிருப்பதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் LEAP Global Linker என்பது அந்த வங்கியினால் தலைமைதாங்கி வழிநடத்தப்படும் ஒரு முன்னோடி முயற்சியாகும். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தகவல் பரிமாற்றத்தை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஓர் அதிநவீன தொடர்பாடல் சூழல் அமைப்பாகும். சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் பக்கபலத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இத் தளம், தொழில் முயற்சிகளை டிஜிட்டல் மயமாக்கவும் வியாபாரச் செயற்பாடுகளை மேம்படுத்தவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நியமங்களுக்கு அமைவாகவும் Global Linker தளத்தின் அனுகூலங்களைப் பயன்படுத்தியும் ஏற்படுத்தப்பட்டுள்ள கொமர்ஷல் வங்கியின் LEAP Global Linker தளம், இந்த நாட்டிலுள்ள Q&E கள் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்கள் தமது பண்டங்கள் மற்றும் சேவைகளை விற்பதற்கு எவ்வித செலவுமின்றி ஒன்லைன் ஸ்டோர்களை அமைப்பதற்கு உதவும். இத் தளத்தின் ஊடாக வியாபாரங்கள் தமது வாடிக்கையாளர் அடித்தளத்தை விரிவுபடுத்த முடியும், உலகெங்குமுள்ள சாத்தியமான முதலீட்டாளர்கள் மற்றும் வழங்குநர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும், நெட்வேர்கிங் முயற்சிகளுக்கு வலுவூட்ட முடியும், வெளிநாட்டுச் சந்தைகளை ஆராய்ந்து தேடிக்கொள்ள முடியும்,