Home » ஜனாதிபதி இல்லாதிருந்தால் நாடு சோமாலியாவாகியிருக்கும்

ஜனாதிபதி இல்லாதிருந்தால் நாடு சோமாலியாவாகியிருக்கும்

விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு

by Damith Pushpika
May 26, 2024 6:30 am 0 comment

கடந்த காலங்களில் தவறாக மக்கள் வாக்களித்ததாலேயே நாட்டை சோமாலியாவின் நிலைக்கு கொண்டு சென்றனரென முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

ஆனால் தேர்தலில் படுதோல்வியடைந்தும் இன்று ஒரு ஆசனத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கு சேவையாற்றுகின்றாரென்றும் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வி கண்ட பின்னர், எமது நடவடிக்கை அமைதியாகவே இருந்தது. கடந்த 2020 இல் படுதோல்வியை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் மற்றும் கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பலர் பிரிந்து போன நிலையிலும் தாங்கள் கட்சியை விட்டு வெளியே போகவில்லையென்றும் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். அடுத்த தேர்தலே தனது அரசியல் பயணத்தின் இறுதித் தேர்தல் என்றும், அதிலிருந்து தானும் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division