குளோபல் சிஇஓ போரத்தினால் நடத்தப்பட்ட தலைமைத்துவத்துக்கான விருது வழங்கும் நிகழ்வில் மெக்ஸன்ஸ் ஹோல்டிங்ஸ் (Macksons Holding) நிறுவனத்தின் ஏழு திறமையான இளம் தலைவர்கள் Global CEO 45 Under 45 Leadership Excellence Platinum Award விருது பெற்றுள்ளனர். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இந்த நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது விருது பெற்றவர்களின் சாதனைகள் மற்றும் தொலைநோக்கு சிந்தனையுடனான தலைமைத்துவத்திற்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டது. நிறுவனத்தின் இளம் தலைவர்களான சிமர் மில்பர், இஸ்மாயில்ஹு சைன், அஹமத் சாபி, மிஸஹா மிஸ்வர், அக்லா மிஸ்வர், அமானி மிஸ்வர்,
மற்றும் ஸாரா மிஸ்வர் ஆகியோர் இந்த சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மிஸ்வர் மக்கீன் இவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையைப் பாராட்டி வாழ்த்தியுள்ளார். விருது பெற்றவர்கள் முகாமைத்துவப் பணிப்பாளருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொணடனர்.