பாலின சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதில் ஈடுபட்டுள்ள முன்னணி நிதி நிறுவனமான தேசிய அபிவிருத்தி வங்கி [NDB], மூன்றாவது தடவையாக பாலின சமத்துவத்திற்கான (EDGE) சான்றிதழ் பெற்றமையை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரம், உள்ளடக்கிய பணியிடத்தை உருவாக்குவதற்கான NDBயின் தற்போதைய அர்ப்பணிப்பையும், அதன் செயல்பாடுகளின் அனைத்து நிலைகளிலும் பாலின சமத்துவத்தையும் வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்பான செயற்பாடுகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
பாலின சமத்துவத்திற்கான உலகின் முன்னணி மதிப்பீட்டு முறை மற்றும் வர்த்தகச் சான்றிதழ் தரமான EDGE சான்றிதழ், தொழில் புரியும் இடத்தில் பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. மீண்டும் ஒருமுறை இந்த சான்றிதழை பெற்றதன் மூலம், நிதித்துறையில் பாலின சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மை நடைமுறைகளை மேற்கொள்ளும் ஒரு முன்னோடி நிறுவனமாக NDB வங்கி தனது நிலையை உறுதிப்படுத்துகிறது.
NDBயானது பல ஆண்டுகளாக, பாலின சமநிலை, சமமான வேலைக்கு சம ஊதியம் மற்றும் நிறுவனத்திற்குள் பெண்களுக்கு தொழில் முன்னேற்ற வாய்ப்புகளை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்காக வடிவமைக்கப்பட்ட பல முன்முயற்சிகள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகளில் தலைமைத்துவ பயிற்சித் திட்டங்கள், நெகிழ்வான பணி ஏற்பாடுகள், உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான ஆதரவுத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்,
EDGE மூலோபாயம் மற்றும் IFC ஆகியவற்றுடன் இணைந்து, NDBயானது ஆட்சேர்ப்பு, பதவி உயர்வுகள், தலைமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி மற்றும் வழிகாட்டல் திட்டங்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை முறையாக மதிப்பீடு செய்து மேம்படுத்தியுள்ளது.