அன்பென்ற வித்தினிலே !
அகிலத்தில் தழைத்தோங்கிய
வேதங்களின்
வண்ணங்கள் வேறானாலும்
வடிவங்கள் நுாறானாலும்
மாசில்லா வாசத்தையே!
மனிதத்திற்கு தந்து கொண்டிருக்கிறது
ஆனாலும்
வேலியமைத்து வேற்றுமை கண்டிடும்
போலியான மனிதர்களின்
பொய்யான முகத்திரையைக்
கிழித்திடுவோம்
ஓரினம் நாமென்று ஓங்கிய
குலமென்றும்
அறியாமை இருள் திரை கிழித்து
ஒளியேற்றி அகிலத்தில் மாந்தர்களின்
பாதையை செப்பனிடும்
வேதங்களின் மாண்புகள் அறியாது
உயர்வு, தாழ்வென்று
தரம்பிரிக்கும் வெளிச்சமில்லா
சிந்தனையாளருக்கு
விடைகொடுப்போம்
ஓரினம் நாமென்று
குறுக்குக்கோடிட்டு மனிதத்திற்குள்
குறுகிய சிந்தையோடு
கொள்கை கொண்ட
மாந்தர்களின் முதுகுடைத்து
எழுச்சி கொண்டு மனிதம் தழைத்தோங்கிடவே !
பாடிடுவோம் ஓர்குலம் நாமென்று
ஓர்தாயின் கருவறையில்
உருப்பெற்ற பிள்ளைகளாய்
சீர்பொழியும் ஒற்றுமையில்
சிறப்புற்று நாமும்
நாட்டில் நலமமோங்க
வாழ்ந்திடனும்
நாற்றிசையும்
செயம் செயமென ஒளிர்ந்திடவே !