யாரப்பா ….?
இந்த நரகத்திற்கு..
துவாரமிட்டது…!
பூலோகம் அல்லோலப்படுகிறது…
நரகத்தின்…
சிறுமூச்சு வெளியானதால்….
கருகிப் போகிறது….
சில உருகிப் போகிறது…..
உயிர்களெல்லாம் ….
உணர்விலிருந்து …..
உதிர்ந்து போகிறது…
சிரித்து …..
சிலிர்த்து…
துளிர்த்து…
மிளிர்ந்த பசுந்தரையாம்….
புல்வெளியெல்லாம்….
கருகி சிதைந்து….
கருச்சிதைந்து போனதே….
சு(க)டும் கோடை உன்னாலே……
சலசலவென….
சத்தமிட்டு..!
கலகலவென…
மெட்டு போட்டு..!
தத்தி தத்தி…
தாவிப் பாய்ந்து..!
குளுகுளுவென….
குளிர்மையோடு..!
சிறுபதுமையாய் தவழ்ந்து …
சிரித்து வந்த …
நீரோடையும் ……
வற்றிப்போன…
சகதியாயானதே..!
வதைத்தெடுக்கும் ….
க(சு)டும் கோடையே
உன்னாலே..!
__
மேனியெல்லாம்….
உரசிச் செல்லும் ..!
மெல்லிய குளிர் காற்றும்.!
பூமியெங்கும்…
குடை பிடிக்கும்..!
பஞ்சு நிழல் மேகங்களும்..!
திசை தெரியாதேசத்தில்…
தொலைந்து தான் போனதே..!
சுட்டெரிக்கும் …
க(சு)டும் கோடையே…
உன்னாலே…!
__
தெருவெல்லாம்….
நிழலிலிருந்தும் ..!
தேர் இழுத்த உடல் போல…
தேகமெல்லாம்..!
வியர்வை நிறைந்து…
கண்ணெல்லாம்….
இருட்டிப் போய்…!
களையிழந்து போகின்றோம்.!
கொஞ்சம் ….
தணிந்துதான் செல்வாயோ..?
க(சு)டும் கோடையே…!