42
இளம் வயதிலே
இறந்து போகிறான்
இளைஞன் விபத்தினால்
விந்தையிது
முதிய வயதில் முதியவர்
வாழ்க்கையை
முடித்துக் கொள்ள
முடியாமல் நாள்தோறும்
தள்ளாடுகிறார் பொல்லுடன்
ஆற்றாமையினால்
ஆறுதல் சொல்ல
அருகில் யாருமில்லை
இளமையில்அவர் ஆடிய
ஆட்டத்தினால் அல்லாடுகிறார்
அன்றாடம் அவதியுடன்
ஆற்றாமை அவரை
அல்லும்பகலும் துன்புறுத்துகிறது
இறைவனை வேண்டுகிறார்
எந்நேரமும் தனது உயிரை
எடுத்துவிடு என்று
காலம் அவருக்கு
விடை கொடுக்க வேண்டுமே