116
இன்னும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உமா ஓயா மின் உற்பத்தி நிலையத்தினூடாக 120 மெகாவோட் கூடுதல் மின்சாரம் தேசிய அமைப்புக்கு கிடைத்துள்ளதுடன், இதனூடாக கிடைத்த நேரடி மின்சாரத்தின் பலன்களை மக்களுக்கு வழங்க முடியுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.
அதற்கமைய மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.