தினகரனின் 92ஆவது ஆண்டு நிறைவையொட்டி களுத்துறை மாவட்டத்திலுள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளின் ஓய்வுபெற்ற அதிபர்களும் ஆசிரியர்களும் பேருவளை தேர்தல் தொகுதியிலுள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளின் ஓய்வுபெற்ற அதிபர்களும் ஆசிரியர்களும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் சமூக சேவையாளர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த கௌரவிப்பு விழா பேருவளை ஸேம் ரிபாய் ஹாஜியார் வித்தியாலய அஷ் செய்க் முஸ்தபா வலியுல்லாஹ் கேட்போர் கூடத்தில் இன்று (19) காலை 9.00 மணிக்கு தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தினகரன் பேருவளை வாசகர் வட்டத்துடன் இணைந்து சமூக சேவையாளர் எம்.பாஸி ஸுபைரும் மேற்கொண்டுள்ளார்.