Home » சோழன் உலக சாதனை படைத்த 100 அழகுக்கலை நிபுணர்கள்

சோழன் உலக சாதனை படைத்த 100 அழகுக்கலை நிபுணர்கள்

by Damith Pushpika
May 19, 2024 6:00 am 0 comment

கொழும்பு குளோபல் டவர் ஹோட்டலில் 100 அழகுக் கலை நிபுணர்கள் ஒன்றிணைந்து 2 மணிநேரங்களில் செய்ய வேண்டிய மணப்பெண் அலங்காரத்தை 20 நிமிடங்களில் நிறைவு செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்த அதேவேளை, மேலும் சிலர் ஊசியைப் பயன்படுத்தி செய்யும் மிகவும் நுட்பமான எம்பிராய்டரி வகையான ஆரி வேர்க் கலையில் ஏ4 தாளில் இலங்கையின் வரைபடத்திற்குள் சிங்கத்தை 20 நிமிடங்களில் வரைந்தனர். மேலும் சிலர் மெஹந்தி மூலம் 20 நிமிடங்களில் இரண்டு கைகளிலும் அலங்காரமிட்டு சாதனை படைத்தனர். இந்த சோழன் உலக சாதனை நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார் கீர்த்தி ஜே அழகுக்கலை மையத்தின் உரிமையாளர் கீர்த்திகா ஜயசிங்க. சோழன் உலக சாதனை நிகழ்வின் பல்வேறு ஒழுங்குகளை பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் மேற்கொண்டிருந்தது. வழங்கப்பட்ட 20 நிமிடங்களில் தமது இலக்கை நிறைவு செய்த 100 அழகுக்கலை நிபுணர்களுக்கான சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம் மற்றும் பேச் போன்றவற்றை சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரும் உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவும் வழங்கிப் பாராட்டினார்கள்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division