Home » CTCஇன் முகாமைத்துவ பணிப்பாளராக Fariyha Subhani

CTCஇன் முகாமைத்துவ பணிப்பாளராக Fariyha Subhani

by Damith Pushpika
May 19, 2024 6:39 am 0 comment

இலங்கை புகையிலை நிறுவனம் பிஎல்சி (CTC) 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி முதல் அதன் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் Fariyha Subhaniஐ நியமித்துள்ளது.

டிசம்பர் 2021 இல் பதவிக்கு நியமிக்கப்பட்ட மொனிஷா எபிரகாமிடமிருந்து Fariyha முகாமைத்துவப் பணிப்பாளராகப் பொறுப்பேற்றார். CTC இல் இணைவதற்கு முன்பு, Fariyha, Upfield (Private) Limited, South & Central Asia, ஒரு முன்னணி தனியார் சமபங்கு உணவு நிறுவனத்திற்கான முகாமைத்துவப் பணிப்பாளராக பணியாற்றினார். அவர் யுனிலீவர் பிஎல்சியுடன் 28 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார், அங்கு அவர் புவியியல் மற்றும் பல்வேறு FMCG வகைகளில் பல்வேறு சிரேஷ்ட தலைமைப் பதவிகளை வகித்துள்ளார்.

2002ஆம் ஆண்டில், யூனிலீவருடன் சர்வதேச பணிக்காக தாய்லாந்து சென்றார், அங்கு ஹோம்கேர் அனைத்திற்கும் உலகளாவிய மற்றும் பிராந்திய வர்த்தக நாமங்களை அவர் பொறுப்பேற்றார்.

அவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார், பின்னர் 2006 இல் பாகிஸ்தானுக்குத் திரும்பி Unilever Pakistan Foods Ltd (UPFL) வணிகத்தை முன்னெடுத்துச் சென்றார், மீண்டும் 2009 இல் UPFL சபையில் CEO ஆனார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division