NDB வங்கியானது சிறந்த முகாமையாளர்கள் விருதுகள் 2023 இல் “சிறந்த முகாமையாளர்களைக் கொண்ட நிறுவனமாக” அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் அதன் அர்ப்பணிப்பான சேவையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சிறந்த முகாமையாளர்களை அங்கீகரிக்கும் பொருட்டு கொழும்பு லீடர்ஷிப் அகடமியினால் [Colombo Leadership Academy] நடத்தப்பட்ட இந்நிகழ்வில் NDB க்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரமானது அதன் விதிவிலக்கான தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவத் திறமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இவ்விருது வழங்கும் விழாவில் NDBயின் சிறப்பான உயர் தகுதியுடைய செயல்திறனை வெளிப்படுத்தியமைக்காக வங்கியின் முகாமைத்துவத்தைச் சேர்ந்த ஏழு பேர் பல்வேறு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றனர். காலிங்க சேனாநாயக்க, சுரானி பீரிஸ் மற்றும் நிலந்த அக்குருகொட ஆகியோர் நிறுவனத்தினை சீரமைத்தல் என்ற பிரிவின் கீழ் அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காக கௌரவிக்கப்பட்டனர். இதேவேளை, ரேணுகா பெரேரா மற்றும் விஞ்சய ஜயசிங்க ஆகியோர் அவர்களின் முன்மாதிரியான குழு செயல்திறன் மற்றும் ஒத்துழைப்புக்காக அங்கீகரிக்கப்பட்டனர். மேலதிகமாக ருசிந்த கோதாகொட மற்றும் ஆசிரி சரத்சந்திர ஆகியோர் பெறுபேறுகளை துரிதப்படுத்தல் மற்றும் அதிசிறந்த நிர்வாகம் ஆகியவற்றில் அவர்களின் சிறப்பான திறமைக்காக விருது பெற்றனர்.