இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குனரும், இலங்கை விளையாட்டுப் போட்டிகளின் சிறந்த ஊக்குவிப்பாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் மாற்றுத்திறனாளி விளையாட்டுக்களின் உத்தியோகபூர்வ நிர்வாக அமைப்பான தேசிய பாராலிம்பிக் குழுவின் ஆதரவுடன் நடைபெறும் 2024 தேசிய பாரா மெய்வல்லுனர் வெற்றிக் கிண்ணத்திற்கு அனுசரணை வழங்கியுள்ளது.
நாட்டின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 45 இற்கும் மேற்பட்ட விளையாட்டு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 600க்கும் மேற்பட்ட வீரர்களை ஒன்றிணைக்கும் இப்போட்டி, இலங்கையில் மாற்றுத்திறனாளி மெய்வல்லுனர்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் முதன்மை மெய்வல்லுனர் வெற்றிக்கிண்ணம் ஆகும். இந்தப் போட்டி நேற்று (11) அரம்பமான நிலையில் இன்றைய தினம் (12) நிறைவடையவுள்ளது.
இந்தப் போட்டிகள் உடல் ஊனமுற்றோர் மற்றும் அறிவுசார் குறைபாடுடையோர் ஆகிய மூன்று மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளை வழங்குகிறது.