Home » பாதுகாப்பு சபையில் தயாசிறியும் வலேபொடவும்
ஜனாதிபதியுடன்

பாதுகாப்பு சபையில் தயாசிறியும் வலேபொடவும்

by Damith Pushpika
May 12, 2024 6:10 am 0 comment

ஜனாதிபதி ரணில் வார இறுதியை பொலன்னறுவை மாவட்ட ‘உறுமய’ காணி உரிமையாளர்களின் முறுவல் பூத்த முகங்களுடன் கழித்தார். பெரும்பாலான மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர். அதற்குக் காரணம், நீண்ட காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு காணி உறுதிப் பத்திரம் கிடைத்தமையாகும். அன்றைய தினமே கொழும்புக்கு வந்த ஜனாதிபதி, ஜப்பானிய நிதி அமைச்சரைச் சந்தித்து, இலகு ரயில் திட்டம் உள்ளிட்ட ஜப்பானியத் திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடினார். அன்று இரவிலும் மறுநாள் காலையிலும் ஜனாதிபதி ரணிலைச் சந்தித்த அமைச்சர்கள் மற்றும் குடிவரவு அதிகாரிகள் விசா தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்துப் பேசினர். முடிவில், சுற்றுலா விசா கட்டணத்தை பழைய முறையிலேயே வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. குடிவரவுத் திணைக்களத்தின் கீழ் விசா வழங்குவதற்கான அதிகாரத்தை வழங்குவதற்கும், VFS நிறுவனம் செயற்பட்டு வந்த பணிப் பிரிவைப் பராமரிக்கவும் ஜனாதிபதி ரணில் முடிவு செய்தார். இதன்படி ரணில், அமைச்சர் டிரான் அலஸ், அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா மற்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கு இவ்விடயம் தொடர்பில் அறிவித்து சனிக்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றுக்கொண்டார். திங்கட்கிழமை ஜனாதிபதி ரணிலுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருந்தது. கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களோடு , ​​அமைச்சரவைக் கூட்டத்திலும், பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்க வேண்டியிருந்தது. ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் சஞ்சீவ எதிரிமான்ன, அமைச்சர் மனுஷ, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் கடன் பெற்று “கிரிப்பில்” சிக்கித் தவிக்கும் மக்களைப் பற்றிக் கூறினார்கள். “சார் பலர் வங்கிகளில் கிரெடிட் கார்டுகளை எடுத்து, கடன் கொடுத்தவர்களிடம் கையெழுத்திட்டு, கடனை அடைக்க முடியாமல் கிரிப்பில் சிக்கிக் கொள்கிறார்கள். உறுதிமொழியில் கையெழுத்திட்டவர்களில் பெரும்பாலானோர் இங்கு உள்ளனர். இவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு கூறுங்கள்” அமைச்சர் மனுஷ கதையை ஆரம்பித்தார். இவர்களில் இரண்டு முதல் மூன்று இலட்சம் பேர் உள்ளதால் அவர்களுக்கு வேறு ஒரு நிவாரண அமைப்பை உருவாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு தெரிவித்தனர். அந்தக் கடனை அடைக்க மறு கடன் அல்லது சந்தர்ப்பம் பெற்றுத் தர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அனைத்து வங்கிகளுடனும் கலந்தாலோசித்து அதற்கான முறைமையொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்தார். செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி ரணில் தற்போது எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பாதுகாப்புச் சபை சந்திப்புக்கு சென்றார். அவர்கள் தயாசிறி ஜயசேகர மற்றும் காமினி வலேபொட ஆகிய இரு சபை உறுப்பினர்களாவர். உக்ரைன் மற்றும் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற இந்நாட்டின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் கடத்தப்படுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி வழங்கிய தகவலின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் அவர்களை இராணுவத் தலைமையகத்திற்கு வரவழைத்தார். பாதுகாப்புத் தலைவர்களிடம் எம்.பி.க்கள் வைத்திருக்கும் தகவல்களை வெளியிடுமாறு ஜனாதிபதி வழங்கிய அறிவித்தலுக்கு அமைய, ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை சட்ட விரோதமாக அந்நாடுகளுக்கு அனுப்பி சிக்கலுக்கு உள்ளாக்கியதாகவும் அவர்களில் பலர் அந்த யுத்தத்தில் உயிரிழந்ததாகவும் எம்.பி.க்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அந் நாட்டிற்கு சென்று தப்பி வந்த இராணுவ சிப்பாய் ஒருவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் அந்தச் சிப்பாய் கூறிய கதையைக் கேட்கவும் வாய்ப்பு கிடைத்தது. இது குறித்து உடனடியாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் ஆலோசனை வழங்கியுள்ளார். பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில், செய்திப் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். . ரஷ்ய, உக்ரைன் நாடுகளுக்கு செல்லும் படையினர் மற்றும் அங்குள்ள ஆபத்தான நிலைமைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி ரணில், அதற்காக தயாசிறி மற்றும் வலேபொட ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, செய்திப் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன இது தொடர்பான ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தார். அன்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு கூடியதையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார, மே தினம் குறித்த மீளாய்வு ஒன்றை முன்வைத்ததையடுத்து, குழுவினர் அது தொடர்பில் கலந்துரையாடத் தொடங்கினர். பொதுச்செயலாளர் அன்றைய குறைகள் மற்றும் பஸ்வண்டிகள் மற்றும் ரயில்களில் வந்தவர்கள் பற்றிய எண்ணிக்கை பற்றிய தகவல்களையும் வழங்கினர். பிக்குகள் நூறு பேர் வருகை தருவதாக கூறினாலும் அவர்கள் வரவில்லை என்ற விடயமும் கூறப்பட்டது. பிக்குகளின் வருகையை பொறுப்பேற்ற ரவி கருணாநாயக்க, பிக்குகளின் வருகையை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் தடுத்ததாக தெரிவித்தார். “சமந்தா மண்டபத்தின் பக்கவாயில் உள்ள வழியில் பிக்குகள் உள்ளே வருவதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.” பொதுச்செயலாளர் ரங்கே கூறும்போது, ​​அந்தப் பக்கமிருந்து வர அனுமதிக்கவில்லை என்று ரவி கூறினார்.“ பிக்குகள் வருவார்கள் என்று நாங்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவுடம் ஒரு பட்டியல் கொடுத்திருந்தோம். அதனால் ரவி சொன்னவர்கள் கால்சட்டை, சட்டை அணிந்து வந்தார்களா என்று தெரியவில்லை” என்றார். இவ்வாறு பொதுச்செயலாளர் சொன்ன போது கூட்டத்தினரின் சிரிப்பை அடக்க முடியவில்லை. மக்கள் பங்கேற்பு தொடர்பாக சிறிகொத்த அதிகாரிகள் முன்வைக்கும் புள்ளிவிபரங்களில் குறைபாடு இருப்பின், மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து தனித் தனி ஆவணங்களை பெற்று, அவர்களின் தரவுகளுடன் சிறிகொத்தாவின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்குமாறு, பொதுச் செயலாளர் ரங்கே முகாமைத்துவ சபைக்கு அறிவித்தார். இது தொடர்பில் மேலும் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி ரணில் வழங்கிய பணிப்புரையின் பிரகாரம் புதன்கிழமை இக்குழுவின் செயலாளர் நாயகம், தவிசாளர் வஜிர, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க, கித்சிறி மஞ்சநாயக்க, ரொனால்ட் பெரேரா, லசந்த குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

2100 கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் புதன்கிழமை அலரி மாளிகைக்குச் சென்றார். அரச நிர்வாக அமைச்சராக பிரதமர் தினேஷும் கலந்து கொண்டார். கிராம உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தக் கூடிய 4 வேலைத் திட்டங்களைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கிராம உத்தியோகத்தர்களின் சேவை நாட்டுக்கு எவ்வாறு முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதியின் உரையின் முடிவில் மண்டபத்தில் இருந்து எழுந்த கரகோஷம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் போன்று, பிரதமரின் செயலாளரும் ஜனாதிபதியின் உரையைப் பாராட்டியதுடன், “இவ்வாறான ஒரு உரையை நாங்கள் கேட்டதில்லை” என்றார். நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் வியாழக்கிழமை பாராளுமன்றத்திற்கு சென்றார். சபைக்குச் சென்று அறிக்கையொன்றை விடுத்த ஜனாதிபதி ரணில், நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஆராய்ந்தார். எதிர்க்கட்சித் தலைவர் இருந்தபோதும் இந்த உரையை மிஞ்ச முடியாது என ஐ.ம.ச எம்.பி.க்கள் ஆளும் கட்சி எம்.பி.க்களிடம் கூறினர். ஜனாதிபதி தனது உரையை முடித்ததும் முதலில் ஆளுங்கட்சி லாபிக்கு சென்றார். இரண்டாவதாக, எதிர்க்கட்சி லாபிக்கும் சென்றார். டயனா கமகே எம்.பி.யை பற்றிய பேச்சு ஆளுங்கட்சியின் லாபியில் வந்தபோது, ​​“ஐ.ம.ச இப்போது கூச்சலிடுவதில் பயனில்லை இது தெரியாமல்தான் அவரை கட்சியின் துணைச் செயலாளராக நியமித்தார்களா? என .” அமைச்சர் பிரசன்ன உரத்த குரலில் கூறினார்.“அவர் ஆளும் கட்சிக்கு வந்து அமைச்சரானதால் தான் இந்த விஷயத்தை இப்போதுதான் ஆராயந்திருக்கிறார்கள்” என்று. பாராளுமன்ற உறுப்பினர் தொலவத்த பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து கூறினார்.“சஜித் கேட்ட கேள்விக்கு சார் சொன்ன பதிலால் அவருக்கு எதுவும் விளங்காமல்போய் விட்டது. அதன் காரணமாக கடைசியில் ஏன் வெளியேறுகிறீர்கள் என்று சத்தம் போட்டார். ஆனால் அதற்கு அமைச்சர் மனுஷ அளித்த பதிலை சகித்து கொள்ள முடியாததாலும் அவ்வாறு செய்திருக்கலாம்” எனக் கூறிய மதுர விதான எம்.பி.யின் பேச்சில் அனைவரும் கவரப்பட்டனர். .“பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்குப் பணம் கொடுக்க முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு எப்படிச் சொல்ல முடியும்? என பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வினவினார்கள்” அவர்கள் எப்படி அதைச் சொல்ல முடியும்?” ஜனாதிபதி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மறுபுறம், தேர்தல் ஆணைக்குழு அரசு பணிகளை நிறுத்தச் சொல்ல முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ஆறுதல் படுத்தினார். எந்த நேரத்திலும் தேர்தல் ஆணைக்குழு அரசின் பணிகளை நிறுத்தச் சொல்ல முடியாது. அமைச்சர் வக்கம்புர, அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரும் ஜனாதிபதியின் உரையை உறுதிப்படுத்தினர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்னும் ரத்து செய்யப்படாததால் தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு கூறுகிறது. எம்.பி.க்கள் சொல்ல ஆரம்பித்தனர். “இப்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல் இல்லை. ஜனாதிபதி தேர்தல் மட்டுமே வரவுள்ளது. என்று அமைச்சர் பிரசன்ன தெரிவித்தார். ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட விடயம் தொடர்பில் சஞ்சீவ எதிரிமான்ன எம்.பி மீண்டும் ஜனாதிபதிக்கு நினைவூட்டியிருந்தார். “பேராசிரியர் ஆஷு மாரசிங்கவிடம் இது பற்றிப் பேசுங்கள். நானும் அதைப்பற்றி பார்க்கச் சொல்கிறேன்” என்றார்.

கிரிப் பற்றி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அதன்பின், எதிர்க்கட்சி லாபியை நோக்கிச் சென்ற ஜனாதிபதி, “இன்று ஆட்கள் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. இதோ ஒரு கட்சித் தலைவர்.” என்று கூறி ரிஷாத் பதியுதீன் எம்.பி.யின் அருகில் அமர்ந்தார். அப்போது அங்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாவையும் இன்னொரு கட்சி தலைவர் எனக்கூறி ஜனாதிபதி வரவேற்றார். தூரத்தில் இருந்த எம்.பி ஹாரீஸிடமும் ஜனாதிபதி இவரும் கட்சித் தலைவர் என்று பேசினார். அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ஜனாதிபதி அவர்கள் முதுகில் தட்டி “ஒன்றாக நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என்றார். ஜனாதிபதி ரணில் பாராளுமன்ற அலுவலகத்திற்கு வந்த போது, ​​அருகில் வந்த ஆளும் கட்சி எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாநகர சபை பட்டியலில் வேட்பாளராக இருப்பதால் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வர முடியுமா என்று கேட்டனர். இதற்கான சட்டப் பின்னணியை சபாநாயகர், சட்டமா அதிபரிடம் கேட்க வேண்டும் என்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அன்று சுமார் 20 கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அங்கு சந்தித்தார். அதனை பேராசிரியர் ஆஷு மாரசிங்க சரியாக ஒருங்கிணைத்திருந்தார். “எதிர்க்கட்சித் தலைவர் தினமும் எல்லாவற்றிற்கும் பேசுகிறார். அவரால் அந்த கட்சியில் உள்ளவர்களால் பேச முடியாத நிலை உள்ளது. அதனால், அவர் தனியாக பேசுவதற்கு சனிக்கிழமை ஒரு நாள் ஒதுக்குவோமா? அப்போது அவருக்கு நாள் முழுவதும் பேசி இந்த ஆசையை போக்கிக்கொள்ளலாம்” என்று உறுப்பினர்கள் கூறியதும் அனைவரும் புன்முறுவல் பூத்தனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division