அற்பமாய் மண்ணில் இருந்தேன்
அறியாமையில் நான் துவண்டேன்
கற்பகத் தருவாயெனை ஆக்கினான்
கவலைகள் என்னுள் போக்கினான்
_
அன்னையின் கருவில் வளர்ந்தேன்
அநாதையா யிங்கு பிறந்தேன்
மண்ணி லெனை விதைத்தான்
மாமனிதனாய் நான் முளைத்தேன்
_
பள்ளியி லெனை சேர்க்கவில்லை
பாமரத்துவம் யாரும் போக்கவில்லை
கல்வியா லவனெனை மூடினான்
கண்ணியத்தை நான் சூடினேன்
_
பதவிக லெதுவும் வரவில்லை
பட்டங்கள் யாரும் தரவில்லை
வித்தா யெனை புதைத்தான்
விருட்சமாய் நான் தளைத்தேன்
_
ஏறெடுத்து மெனை பார்க்கவில்லை
ஏற்ற மெதுவும் இருக்கவில்லை
கருணையா லவனெனை பார்த்தான்
கௌரவத்தில் நான் பூத்தேன்
_
தந்தை முகம் காணவில்லை
தளைப்பே னென்று தோணவில்லை
விந்தைக ளாலெனை ஆண்டான்
வெற்றிகளை நானிங்கு பூண்டேன்
_
அற்பத் துளியாய் நான் இருந்தேன்
அரு வெறுப்பை சுமந்திருந்தேன்
மறு உருவம் எனக்களித்தான்
மனு வடிவில் கண்விழித்தேன்
_
ஆடை யின்றி அவதரித்தேன்
அழுது நாளும் பரிதவித்தேன்
பீடைகள் என்னுள் போக்கினான்
பால்நிலவா யெனை ஆக்கினான்
_
எதுவு மில்லாது நானிருந்தேன்
எல்லா மவனே எனக்கீந்தான்
எதையும் நான் நினைக்கவில்லை
எனதிறைவ னெனை மறக்கவில்லை
_
இத்தனையும் செய்த இறைவனை
எண்ணாதிருப்பது பெரும் நிந்தனை
அத்தனை பிழையும் பொறு தூயனே
அருள் மழை பொழி நாயனே_
–
அருள் மழை பொழிவாய் நாயனே
38
previous post