47
மங்கையின் மகத்துவம்
போற்றுவோம் வாரீர்
கங்கையின் சிறப்பாய்
தூய்மையாக்கும் கேளீர்
புனிதமான கற்பும்
பெண்களுக்குண்டு அறிவீர்
மனிதம் காப்பதில்
அவர்களென புரிவீர்
மழலையின் தாயாகும்
மகத்துவம் பாரீர்
மகிழ்ச்சியின் உச்சமே
பெண்களென கூறீர்
அன்பைப் பகிர்வதில்
பெண்களே என்பீர்
பண்பைப் போதிப்பதில்
அவர்களைக் காண்பீர்
தியாகத்தின் சிகரமாய்
உயர்ந்திடும் பெண்மை
தாயாகி உயர்த்துவதில்
ஏணியாகும் மேன்மை