நினைத்துப் பார்க்கிறேன்
உன் சேவைகளை
அமரத்துவம் அடைந்த
அண்ணல்
ஆரியரத்ன.ஐயா
இனமதகுல
வேறுபாடின்றி
இயங்கினாய்
பேசு பொருளாய்
ஏழைகள் வாழ்வில் நீயும்
இணைந்துமே சேவை
செய்தாய்
பாதைகள் என்றும்
வீடுகள் என்றும்
நுண்நிதிக்கடன் என்றும்
எவ்வளவு உதவினாய்
எங்கிருந்து பெற்றாய்
ஆழிப்பேரலை அனர்த்தம்
கொரோனா நோய்த்தாக்கம்
அத்தனை துயர் போக்க
அணிகலனாய் விளங்கினாயே
யுத்த வலியால் உலகே
மறந்து போன
தலைமை தாங்கும் பெண்களை
தரணியில் கண்டெடுத்து
பூசித்தாய் புன்னகை
பெற வைத்தாய்
துயரின் வலியால்
துடித்த மக்களை ஆற்றுப்
படுத்தினாய்.
அதற்கென எத்தனை பயிற்சிகள்
கொடுத்தாய்
காட்டாற்று வெள்ளமாய்
காற்றில்
காவி வந்த இழப்புகளுக்கு
துடுப்பாட்ட துரும்பாய் நீ
மாறினாய்
தொங்குபால அரசாங்கம்
தொல்லை படும்
மக்கள் வாழ்வு
நிலைக்குக் கூடாது
இணைந்து செயற்பட
நினைக்கையில்
இறைவனும் அழைத்து
விட்டான்! என்ன செய்ய
பிறந்தும் நடந்தும்
புகழோடு வாழ்ந்தாய்
இறப்பிலும் சாவிலும்
உனைப்பேச
எத்தனை லட்சம் பேர்
உளர்!