பரீட்சித்துப் பார்த்திட
பக்குவங்கள் தந்திட
பரீட்சையொன்று வந்திடும்…
தேர்வெழுது நேர்த்தியோடு
நேர்மைத் தவறாது வாழ்ந்திடு
சிறந்திடும் கையெழுத்தில்
சிறக்கும் உன் தலையெழுத்து…
நாளை நாளையென்று
நாளைக் கடத்தி விடுவதால்
நாட்களே நகர்ந்திடும்…
இன்றே கற்றிடு
நன்றே கல்வியில் சிறந்திடு
என்றும் வாழ்வு இனித்திடும் …
தோல்வியைக் கண்டு மனம் தளராதே
தோல்வி என்றும் நிலைக்காதே
தோல்வியை கண்டவரெல்லாம்
வாழ்வில் சாதனை படைத்தவர்களே ..
படித்தால் மட்டும் வென்றிட முடியாது
இறையோனின் நாட்டமும்
வேண்டுமென்பதை நினைத்திடு…
கற்று சிறந்தால் பெற்று சிறப்பாய்
கற்றதைக்கொண்டு தேர்வெழுதிடு
இம்மையிலும் மறுமையிலும்
சிறந்திட உயர்ந்திடு…