167
பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட யுக்திய நடவடிக்கையின் ஆரம்பம் முதல் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 4,472 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளில் 41 கிலோகிராம் ஹெரோயின், 43 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 03 இலட்சம் போதை மாத்திரைகள் மற்றும் 1,500 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.