இலங்கையின் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் மொழியில் இரண்டு செய்தி வாசிப்பாளர்களை உருவாக்கி பிரதான இரவு நேர தமிழ்ச் செய்தி அறிக்கையை ஒளிபரப்பி நேத்ரா அலைவரிசை சாதனை படைத்துள்ளது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்ச் செய்தி ஒளிபரப்பில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் செய்தி பிரதானியும் நேத்ரா அலைவரிசையின் பிரபல்யமான செய்தி வாசிப்பாளருமான சீ.பி.எம்.ஷியாம் மற்றும் பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் தீபதர்ஷினி ஆகியோரின் AI பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
அவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (10) இரவுநேர பிரதான தமிழ்ச் செய்தி ஒளிபரப்பில் முழுமையாக தமிழ் மொழியில் செய்திகளை வழங்கினர். வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த பதிவோடு நேத்ரா அலைவரிசை எதிர்காலத்திலும் இவ்வாறான பல புதிய பரிணாமங்களோடு தனது செய்தி அறிக்கையிடல்களை அறிமுகப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.