44
பொது இடங்களில் பெண்கள், சிறுமிகளுக்கு நிகழும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான ‘உலகளாவிய வன்கொடுமை எதிர்ப்பு சைகைகள்’ 3 கை முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று முன்தினம் (10) கொழும்பு தாமரைத்தடாக அரங்கில் DP Education ஏற்பாட்டில் நடைபெற்றது. DP Education ஸ்தாபகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை வெளியிட்டு வைத்தார்.