Home » தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும்

தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும்

சாத்தியமான வழிமுறையும் அதுவே; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

by Damith Pushpika
May 12, 2024 6:45 am 0 comment

தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொடுக்கும். அதுவே சாத்தியமான வழிமுறையாகவும் உள்ளதென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு மற்றும் காரைநகர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய கட்சியின் பொறுப்பாளர்கள், வட்டார செயலாளர்கள், வட்டார நிர்வாக உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு வேலணை துறையூர் முருகன் ஆலய பொது மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர்,

“90ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு பாராளுமன்ற ஜனநாயகத்தை பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண்பதற்கான பயணத்தை முன்னெடுத்து வருகின்றேன்.

சுமார் மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களால் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதியாக நான் இருக்கின்றேன். இதற்கு தீவக மக்களின் பங்களிப்பு அதிகமானதாக இருந்து வருகின்றது.

அதனடிப்படையில் எம்மால் வளர்க்கப்பட்டு வருகின்ற தேசிய நல்லிணக்கம் காரணமாக பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண முடிந்தன. அதேபோன்று எமது மக்களின் வாழ்வாதார எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பமாகவும் இதனை பயன்படுத்த முடிகிறது.

அதேபோன்று, எதிர்காலத்திலும் எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு தேசிய நல்லிணக்கப் பொறிமுறையே நடைமுறையில் சாத்தியமானதாக இருக்குமென்றும்” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். விசேட நிருபர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division