Home » சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புக்கு வட்டி வீதத்தை அதிகரிக்க திட்டம்

சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புக்கு வட்டி வீதத்தை அதிகரிக்க திட்டம்

அறிக்கை கோருகிறார் ஜனாதிபதி ரணில்

by Damith Pushpika
May 12, 2024 6:15 am 0 comment

சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை அதிகரிப்பது தொடர்பில் நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் அடங்கிய விரிவான அறிக்கையை தன்னிடம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதியிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களை கருத்திற்கொண்டு சிரேஷ்ட பிரஜைகளின் வைப்பு வட்டி விகிதத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய விரிவான அறிக்கையை மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு அவர்களின் வங்கி மற்றும் நிதி நிறுவன கணக்குகளுக்கு 15 சதவீதத்துக்கு விஞ்சாமல் ஆண்டு வட்டி விகிதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த வட்டி வீதம் ஒற்றை இலக்க வீதமாக மாறிவிட்டது.

இந்நிலைமையினால் வட்டி வருமானத்தில் வாழ்ந்து வரும் பல முதியோர் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இது தொடர்பில் தனக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிரேஷ்ட பிரஜைகள் அவ்வப்போது அறிவித்துள்ளனர். இதனையடுத்து, இவ்விடயத்தை கவனமாகவும் அனுதாபத்துடனும் பரிசீலித்து மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு விரிவான அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division