பலராலும் எதிர்பார்க்கப்படும் சர்வதேச கைத்தொழில்துறை கண்காட்சி 2024 உடன் செலான் வங்கி தொடர்ந்து 2ஆவது வருடமாக இணைகிறது. கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்படும் இக்கண்காட்சியானது ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூன் 24ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ளது.
சர்வதேச கைத்தொழில்துறை கண்காட்சி 2024இற்கான செலான் வங்கியின் ஆதரவு, இலங்கையின் கைத்தொழில்கள் மற்றும் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் (SMEs) வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு ஊக்கமளித்து சாதகமான பொருளாதார சூழலில் உள்ளூர் வர்த்தகங்களை வலுவூட்டும் வங்கியின் நோக்கத்துடன் நன்கு எதிரொலிக்கிறது. இந்த கண்காட்சியை ஆதரிப்பதன் மூலம் அன்புடன் அரவணைக்கும் வங்கியானது பொருளாதார செழுமையை வளர்ப்பதையும், நாட்டை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.