NDB வங்கியானது, VISA உடன் இணைந்து NDB WriztPay எனும், நாட்டின் முதலாவது பணம் செலுத்தும் பட்டியை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக வங்கியியல் தொழிநுட்ப உலகில் அபரிதமானவொரு பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. இலங்கை வங்கித் துறையில் ஒரு புதிய யுகத்தினை பறைசாற்றுகின்ற இப்புத்தாக்க சலுகையானது நிதிப் பரிமாற்றங்களில் சௌகரியத்தினையும் பாதுகாப்பினையும் மீள்வரையறுக்கின்றது. எமது தொழிநுட்ப விருப்புமிகு வாடிக்கையாளர்களது வாழ்க்கைமுறையுடன் தடையற்று ஒருங்கிணையும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள, NDB WriztPay பட்டியானது, நிதி முகாமைத்துவத்திற்கு சமாந்தரமற்ற இலகுதன்மையையும் அணுகலையும் வழங்குகின்றது. VISA வின் அதிநவீன கொடுப்பனவு தொழிநுட்பத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள, இந்நேர்த்தியானதும் நாகரீகமானதுமான பட்டையானது, VISA தொடர்பாடலற்ற கொடுப்பனவுகள் ஏற்றுக்கொள்ளப்படும் இடங்களிலெல்லாம், உலகளாவிக் காணப்படும் இலட்சக்கணக்கான வணிகர்களுக்கு விரைவானதும் பாதுகாப்பானதுமான பரிவர்த்தனைகளை வழங்குகின்றது.
இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை குறிக்கும் விதமாக, NDB வங்கியின் நிறைவேற்று நிர்வாக அதிகாரி, கெலும் எதிரிசிங்க, NDB WriztPay பட்டையினை பயன்படுத்தி இலங்கையின் முதலாவது பரிவர்த்தனையை ஆரம்பித்துவைத்தமையானது, மணிக்கட்டினை மடக்குவது போன்று இலகுவானதாக வங்கியியலின் எதிர்காலத்திற்கான மேடையை கட்டமைத்துள்ளது.
NDB WriztPay ஆனது தங்களது நிதிப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருக்கும் இலங்கையர்களின் பாதையை மீள்வரையறைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், தொழிநுட்பம் மற்றும் வங்கிச் சேவைகளது தடையற்ற ஒன்றிணைவிற்கும் வழிவகுக்கின்றது. பொருட்களை வாங்குவதோ, உணவகங்களில் உணவு உட்கொள்வதோ, அல்லது வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்வதோ என எதுவாயினும், இவ்வணியக்கூடிய புத்தாக்கமானது தங்களது மணிக்கட்டை தட்டுவதன் வாயிலாக மாத்திரமே, தொல்லையற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவதனை NDB வங்கி வாடிக்கையாளர்களிற்கு உறுதிப்படுத்துகின்றது. NDB WriztPay தனது வாடிக்கையாளர்களிற்கு பின்வருவனவற்றுடனான அளப்பரிய நன்மைகளை வழங்குகின்றது;
சௌகரியம்: பணப்பைகளை தூக்கிச்சுமந்தோ அல்லது பணத்திற்காகவோ அட்டைகளிற்காகவோ பைகளில் தேடித்துலாவும் தேவையோ இன்றி, தங்களது மணிக்கட்டை இலகுவாக தட்டுவதன் வாயிலாகவே கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் உச்சபட்ச சௌகரியத்தினை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கமுடியும்.
அணுகல்: NDB WriztPay பட்டையுடன், வங்கிச் சேவைகள் உங்களது விரல்நுனியில் (மணிக்கட்டு அடியில்!) காணப்படும். வாடிக்கையாளர்கள் தாங்கள் அங்காடி நிலையங்களிலோ, வெளியில் உணவருந்தும் போதோ அல்லது வெளிநாடுகளிற்கு பயணம் செய்யும் போதோவென எங்கும், எப்பொழுதும் தங்கள் கணக்குகளை அணுகவும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் முடியும். பாதுகாப்பு: NDB WriztPay ஆனது பரிவர்த்தனைகளானவை மோசடிகளிலிருந்து பாதுகாக்கப்பட்டதும் பாதுகாப்பளிப்பதுமான, அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் காணப்படுகின்றது. கட்டமைக்கப்பட்ட மறைகுறியாக்கம் மற்றும் உறுதிப்படுத்தல் தொழிநுட்பங்களுடன், தங்களது நிதித் தகவல்கள் பாதுகாப்பாக காணப்படுகின்றது என்பதனை அறிந்து மனநிம்மதியுடன் இருக்கலாம்.