லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பிஎல்சி இன் மதிப்புக்குரிய சுகாதாரக் கல்விப் பிரிவான லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் அக்கடமி புதிய வளாகத்தைத் திறந்து வைத்துள்ளது. இந்தப் புதிய வசதியானது இலக்கம் 657,எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு-05 என்ற முகவரியில் வைத்தியசாலைக்கு அருகில் அமைந்திருப்பதுடன், இது உயர் தரத்திலான சுகாதாரக் கல்வியை வழங்குவது மற்றும் சுகாதாரத் துறையின் பல்வேறு பிரிவுகளில் திறன்மிக்க நிபுணர்களை உருவாக்குவது என்ற அக்கடமியின் அர்ப்பணிப்புக்கு புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது.
அக்கடமியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பிஎல்சி இன் குழு பிரதம நிறைவேற்று அதிகாரி தீப்தி லொக்கு ஆரச்சி தனது பெருமையை வெளிப்படுத்தினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,“நாம் ‘செல்லும் இடங்கள்’ உண்மையில் சிறப்பாகவும், வளர்ச்சியடைந்தும் வருவதையிட்டு லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பெருமையடைகின்றது. சுகாதாரத் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் சிறந்த துறைசார் நிபுணர்களை உருவாக்குவதற்காக சுகாதாரக் கல்வியை அடுத்த கட்டத்திற்கு நாம் கொண்டு செல்கின்றோம் என்றார். சுகாதாரத் தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்களுக்கு பட்டதாரிகள் நன்கு தயார்ப்படுத்தப்பட்டவர்களாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் பரந்துபட்ட வகையில் தயாரிக்கப்பட்ட பாடநெறிகளை அக்கடமி வழங்குகின்றது.
மருத்துவத்துக்கான வெளிப்பாடு மற்றும் பயிற்சியில் சர்வதேச தரத்தைப் பேணுவதற்கு அக்கடமி கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை லங்கா ஹொஸ்பிட்டல் பிஎல்சி இன் பிரதி நிறைவேற்றுஅதிகாரியும், மருத்துவ சேவைப் பணிப்பாளருமான டொக்டர்.லசந்த கருணாசேகர சுட்டிக்காட்டினார்.