உலகில் மாறிவரும் கல்வி முறைக்கு ஏற்ப கல்வியும் மாற வேண்டும். இன்று முழுமையான கல்வி முறை உள்ளது. எமது அரசாங்கத்தினுள், பாடத்திட்ட திருத்தம் மற்றும் ஆசிரியர் பயிற்சி தொடர்பில் தேசிய கொள்கை உருவாக்கப்பட்டு வருகின்றது. மக்கள் விடுதலை முன்னணி இந்த நாட்டில் அதிபர்களைக் கொலை செய்த சகாப்தம் இருந்தது. 1977இல் துப்பாக்கி ஏந்தியபடி ஆட்சிக்கு செல்ல முயன்றனர். பல சந்தர்ப்பங்களில் ஆட்சியைப் பிடிக்க முயன்றனர். அவர்களின் வற்றிப் போன பொருளாதாரக் கொள்கை தொடர்பில் சுனில் ஹந்துன்நெத்தி கருத்து தெரிவித்தார். ஒரு சந்தர்ப்பத்தில் கல்வி விற்கப்படுகிறது என்று சொன்ன கோஷங்கள் இன்று வழக்கொழிந்து விட்டன. ஆரம்ப காலத்தில் தனியார்மயமாக்கல் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை உருவாக்கினார்கள். நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் 200 பில்லியனை இல்லாமல் செய்ததைப் போன்று, அநுரகுமாரவின் மகன் வெளிநாட்டில் தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கிறார். கல்வி தொடர்பான இவர்களது இரட்டை வேடத்தை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
ஜே.வி.பியிடம் கொள்கைகள் இல்லை
110
previous post