58
நான் பார்த்தேன்
அர்ஸின் நறுமலர்களை பார்த்தேன்
என் கண்களை
நம்ப முடியாதவாறு பார்த்தேன்
காஸா மண்ணில் ஓடும்
குருதிப் புனல்களில்
கட்டட இடிபாடுகளில்
நான் வியந்து பார்த்தேன்
சுவனத்து பூஞ்சோலையில்
முதன் முதலாக முகிழவிருக்கும்
பூச் சரங்களை
அதிசயமாக பார்த்தேன்
அர்ஸின் குளிர் மிகு நிழலில்
மின்மினிகளென பறந்து திரியும்
பச்சிளம் குழந்தைகளை
காஸா பூஞ்சோலைகளில்
நான் சத்தியமாக பார்த்தேன்