பம்பலப்பிட்டி மாணிக்கப் பிள்ளையார் கலையரங்கத்தில் இம்மாதம் 4ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு செல்வி. நந்திதா சேரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெறவுள்ளது. இவர் கி. சேரன் மற்றும் சே.புஷ்பமலர் தம்பதியின் புதல்வியும், “தியாகராஜர் கலைக் கோவில்” இயக்குனர்,”‘நாட்டிய கலைமணி” பவானி குகப்பிரியாவின் மாணவியுமாவார். இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் அருந்ததி ராஜவிஜயனும், சிறப்பு விருந்தினராக இலங்கை மத்திய வங்கி துணை இயக்குனர் திருமதி விஜிரனும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அணிசேர் கலைஞர்களாக நட்டுவாங்கம் – பவானி குகப்பிரியா, பாட்டு – தாரணி ராஜ்குமார், வயலின்- சுந்தரமூர்த்தி கோபிநாத், மிருதங்கம்- சண்முகலிங்கம் நாகராஜன், தபேலா- ரெட்ணம் ரெட்ணதுரை வீணை- காயத்ரி சுந்தரமோகன், புல்லாங்குழல்- சிவபாலரெட்ணம்.