பலாங்கொடை, மிரிஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் சமையலறையிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை பயன்படுத்தி எரிவாயு உற்பத்தி செய்வதில் வெற்றி கண்டுள்ளார்.
முகமது பிர்தாவிஸ் ரஷீத் என்ற இந்நபர், வீட்டின் சமையலறையிலிருந்து வீசப்படும் அழுகக்கூடிய குப்பைகளை பரல்களில் சேகரித்து எரிவாயு தயாரித்துள்ளார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இவ்வாறான கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு விடாமல் எரிவாயு உற்பத்தியாக்கி, வீட்டில் சமைக்க அந்த எரிவாயு பயன்படுத்தப்பட்டுள்ளது.
எரிவாயு உற்பத்திக்கு பிறகு, திரவ உரம் உபபொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது. திரவ உரத்தைப் பயன்படுத்தி காய்கறிகளை வளர்க்கவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
“சமையலறையிலிருந்து சேகரிக்கப்படும் அழுகும் குப்பைகளை சேகரித்து பரல்களில் போட்டு சில நாட்கள் உக்கிப்போக வைக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு சுமார் ஐந்து பரல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பின்னர் அந்த பரல்களில் குழாய்கள் இணைக்கப்பட்டு அதிலிருந்து எரிவாயு தயாரிக்கப்படுகிறது.
மீதமுள்ளவை திரவ உரத்தின் ஊடாக விளைபொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வாயு வீட்டில் சமைக்கப் பயன்படுகிறது.
திரவ உரங்களைப் பயன்படுத்தி காய்கறி விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதிய கண்டுபிடிப்பு இதுவாகும்.
இந்த தயாரிப்புகளை மேம்படுத்தி நல்ல தொழில் தொடங்கி நல்ல வருமானம் பெறுவதே எனது நோக்கமாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.