புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள www.srilankaevisa.lk இணையத்தளம் ஊடாக இதற்கு முன்னரான மின்னணு பயண அங்கீகார கட்டமைப்பு மேம்படுகின்றதுடன் இலங்கையின் விசா செயலாக்க முறைகள் பல அறிமுகமாகின்றது. இந்த வலுவான மற்றும் அதிநவீன இணையத்தளமானது வெளிநாட்டிலிருந்து விசா விண்ணப்பிப்பவர்களுக்கு குறுகிய கால, நீண்ட கால, ட்ரான்சிட் விசா மற்றும் இலவச விசாக்கள் உட்பட 15 விசா வகைகள் உட்பட ஒரு மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை தங்கியிருப்பதற்கான விசாக்களை வழங்கும்.
இப்புதிய திட்டமானது 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த விசா புதுப்பிப்பு திட்டமானது, விசா நடைமுறையை நவீனமயமாக்கும் மற்றும் இலங்கையை உலகளாவிய பயணத்திற்காக கேந்திர இடமாக நிலைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுக்கு உதவுகின்றது.
இதற்கு முன்னர் ETA திட்டத்தின் கீழ் சார்க் நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் 30 நாட்களுக்கான சுற்றுலா விசாவிற்கு மட்டுப்படுத்தப்பட்டனர்.
தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள புது விசா திட்டம் ஊடாக சார்க் நாடுகள் மற்றும் சார்க் அல்லாத நாடுகளுக்கு 6 மாத பிரிவின் கீழ் 60 நாட்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் தளம் ஊடாக மிக இலகுவாக விசாக்களை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது.