வர்த்தக திணைக்களத்தை ‘கொம்பேங்க் டிஜிட்டல்’ உடன் இணைத்து லங்கா பே சேவைகள் ஊடாக இணைய வழி கொடுப்பனவுகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.
இதன் விளைவாக வர்த்தகங்கள் அல்லது தனிநபர்கள் ஏற்றுமதியாளர்களுக்கான பதிவுக் கட்டணம், அசல் சான்றிதழ்களை வழங்குவதற்கான கட்டணம் என்பன உட்பட வர்த்தக திணைக்களத்தின் ஏனைய சேவைகளையும் பெற்றுக் கொள்வதற்கான கட்டணங்களை பாதுகாப்பான இணைய வழிக் கொடுப்பனவுகள் மூலம் செய்து கொள்ள முடியும்.
கடதாசி பாவனைகள் அற்ற இந்த செயற்பாடுகள் காரணமாக வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக் கிளையொன்றுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்ற தேவையும் இல்லை. மேலும் இது வங்கியின் நிலைத்தன்மை செயற்பாடுகளுக்கும் பங்களிப்புச் செய்கின்றது. வாடிக்கையாளர்கள் சுற்றாடலுக்கு சிநேகபூர்வமானவர்களாக செயற்படவும் இது வழியமைக்கின்றது என வங்கி அறிவித்துள்ளது.
“கொம்பேங்க் டிஜிட்டல் மேடையில் வர்த்தக திணைக்களமும் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் எமது தர மேம்படுத்தல்கள் மற்றும் பண்புகளின் படிக்கட்டுகளில் நாம் ஒரு படி மேலே சென்றுள்ளோம். இவை எமது சில்லறை வாடிக்கையாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள், கூட்டாண்மை வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு இடையூரற்ற தனியார் மயப்படுத்தப்பட்ட வங்கிச் சேவை அனுபவங்களை பெற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்