உலகின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பேவெல பால் பண்ணை குழுமத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (20) காலை கண்காணிப்பு விஜயத்தை அங்கு மேற்கொண்டார். ஜனாதிபதியை பொது முகாமையாளர் சரத் பண்டார மற்றும் பணியாளர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
இதன்போது கறவை மாடுகள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
2022 டிசம்பரில் ஜனாதிபதி பண்ணைக்கு விஜயம் செய்த போது நாளொன்றுக்கு சுமார் 40,000 லீற்றர் பால் உற்பத்தி இருந்ததாகவும் பின்னர் அமுல்படுத்தப்பட்ட நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் மூலம் நாளாந்தம் 52,000 லீற்றர் பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும், சரத் பண்டார இதன்போது தெரிவித்தார்.