நுவரெலியாவின் லவ்வர்ஸ் லீப் பிரதேசத்தில் வசிக்கும் 06 வயதுச் சிறுவனான ஹர்சித் என்பவர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். நுவரெலியா ஹோலி ட்ரினிடி கல்லூரியில் கற்கும் இச்சிறுவன், கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் முன்னிலையில் இச்சாதனையை நிகழ்த்தினார்.
மனித உடல் உறுப்புகள் கொண்ட உருவப்படத்தை அவதானித்து உடல் உறுப்புகள், தசைநார்கள், தசைநாண்கள் போன்றவற்றை தொட்டு அடையாளம் காட்டி அவற்றின் பெயர்களை இச்சிறுவன் தெளிவாக விளக்கியதுடன், 171 தசைநார்கள், 34 எலும்புகள், 44 தசைகள் போன்ற விபரங்களை ஆங்கிலமொழியில் 03 நிமிடங்களிலும் 30 செக்கன்களிலும் விளக்கிக்கூறி இச்சிறுவன் சாதனை நிகழ்த்தினார்.
இச்சிறுவனின் முயற்சியை அவதானித்த சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினுடைய இலங்கைக் கிளையின் துணைத்தலைவர் ஸ்ரீநாகவாணி ராஜா மற்றும் பொதுச் செயலாளர் இந்திரநாத் பெரேரா ஆகியோர் இச்சாதனையை உறுதிப்படுத்தினர். இம்மாணவனின் முயற்சிக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனமும் பீபில் ஹெல்பிங் பீபில் பவுண்டேஷனும் ஆதரவு வழங்கியிருந்தன.
இச்சிறுவனை பாராட்டி கல்வி இராஜாங்க அமைச்சர், சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி வைத்தார்.
பொகவந்தலாவை நிருபர்