98
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பில் ஏற்பாடு செய்த போராட்டம், கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் (19) நடைபெற்றது. இப்போராட்டத்தில் பெருந்திரளான தோட்டத் தொழிலாளர்களும் மகளிர் அணியினரும் பங்குபற்றினர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் இ.தொ.கா. தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் உரையாற்றினார்.