இலங்கையின் திருகோணமலையில் அண்மையில் நடைபெற்ற 10ஆவது தேசிய சாரணர் ஜம்போரியானது சர்வதேச தோழமைக்கான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியது மாத்திரமன்றி, தொலைநோக்குப் பார்வையைக் கொண்ட தலைவர் முதித பீரிஸின் தலைமைத்துவத்தின் கீழ் லிற்றோ செலுத்திவரும் தாக்கம் மிக்க வகிபாகத்தையும் காண்பித்துள்ளது. பாதுகாப்பு, நிலைபேறுதன்மை மற்றும் ஒருங்கிணைப்பு ஊடாக தேசிய ரீதியிலான மாற்றம் தொடர்பில் லிற்றோ கொண்டிருக்கும் உறுதிப்பாடு நிகழ்வு முழுவதும் உணரப்பட்டதுடன், 28 நாடுகளிலிருந்து பங்கெடுத்த 12,000 சாரணர்கள் மத்தியில் அழியாத அடையாளத்தையும் விட்டுச் சென்றது.
ஜம்போரியில் லிற்றோவின் பிரசன்னமானது, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளித்து எரிசக்தித் துறையில் நிலைபேறான தன்மையை அடைவதில் நிறுவனம் பின்பற்றும் மூன்று முக்கிய அணுகுமுறைகளை ஒழுகும் வகையில் அமைந்திருந்தது. இந்த அடிப்படையில் நிலைபேறான, பாதுகாப்பான எரிசக்தி மாற்றீடாக திரவப் பெற்றோலிய வாயுவைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பரிந்துரைகளை மேற்கொள்வதிலும் லிற்றோ நிறுவனமானது கடந்த காலங்களில் மாணவர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியிருந்தது. “தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை லிற்றோவில் நாம் உறுதியாக நம்புவதுடன், எரிசக்தியின் நிலைபேறு தன்மையில் எதிர்காலத் தலைவர்களை வழிகாட்டும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். திரவப்பெற்றோலிய வாயு தொடர்பில் சாரணர்களை நாம் தெளிவூட்டியதுடன், அவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம். ” என லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார்.