இலங்கையின் நிதிசார் தொழில்துறையில் இதுவரை காலமும் காணப்பட்ட நிலையை முற்றிலும் வேறுபட்ட விதத்தில் அணுகும் ஒரு மூலோபாய நடவடிக்கையாக, Softlogic Capital PLC இன் முழு-சேவை தரகுப் பிரிவான Softlogic Stockbrokers பிரிவின் உள்ளக தொழில்நுட்பக் குழுவால் உருவாக்கப்பட்ட StockGPTஐ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. StockGPT மென்பொருள் தொழில்நுட்பமானது Microsoft Azure OpenAI ஐ சேவை உட்பட அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பில் முதலீட்டாளர்கள், நிதி ஆய்வாளர்கள் மற்றும் நிதி முகாமைத்துவத்தினருக்கு முன்னொருபோதும் இல்லாத மற்றும் உடனடி அணுகலை வழங்க, நிகழ்நேர, நம்பகமான தகவல்களை வழங்குகிறது. இப்போது www.stockgpt.lk மூலம் அணுகக்கூடிய StockGPT ஆனது கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் அறிக்கைகள் மற்றும் நிதித் துறை மற்றும் சுற்றுலாத் துறை தொடர்பான அறிக்கைகளில் இருந்து நம்பகமான மற்றும் நேரடியாக ஆதாரங்களை பகுப்பாய்வு செய்ய உருவாக்கப்பட்டுள்ளது.
தேசியப் பொருளாதாரத்திற்கு அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிய தகவல்களையும் இந்த மென்பொருள் ஆராய்கின்றது.