91
ஒட்டு மொத்த
ஒவ்வாமைக்கும்
ஒன்றித்த ஒளடதமாய்
ஒளியேற்ற வந்த ரமழானே…!
கறையுற்ற
கல்நெஞ்சத்தையும்
கரைத்துருக்கும் கலையழகாய்
கண்தோன்றிய ரமழானே…!
தகித்த இதயத்தையும்
தாகித்த இதழ்களையும்
தணிக்கும் தடாகமாய்
தரணியடைந்த ரமழானே…!
அகமும் புறமும்
அழுக்ககற்றிப் புதுப்பிக்கும்
அரும் ஓடையாய்
அவனி சேர்ந்த ரமழானே…!
இகபர ஈடேற்றமாய்
இறை வசனம் சுமந்த திருமறை
இறக்கி அருளப்பட்ட
இன்ப காலமே ரமழானே…!
இரவிலும் விழித்து
இச்சைகள் ஒழித்து
இறை பொருத்தமடைய
இன்பத்தேன் சுவைக்கிறோம் ரமழானே…!
மண்ணில் பூத்த
மணக்கும் மலராய் உனை
மனதோடு ஆரத்தழுவிட பல
மடங்காய் நன்மைகள் தருவாய் ரமழானே…!