பாவக் கறைகளைப் போக்கிடும்
படைத்தவன் தந்தருளே நோன்பு!
பசியெனும் ஏழையின் உணர்வு
பணக்காரனுக்கும் கடமையே நோன்பு!
பட்டினியாய் இருப்பதுவல்ல மாண்பு
படைத்தவனும் விரும்பிடும் நோன்பு!
பகைவன் இப்லீஷ்க்கும் விலங்கிட்டு
பார்வையில் இறையச்சம் பேணிடு!
பகல்பொழுது பசித்திருக்கும் விரதம்
பகைவனிடமும் இருப்பதில்லை குரோதம்!
பிறை கண்டே நோன்பெடுப்பார்
பிறர் குறைகளையும் தின்னாதிருப்பார்!
படைத்தோனை தொழுவதே இன்பம்
புவனத்தில் விலகிடுமெல்லாத் துன்பம்!
புனித ரமழானில் மலர்ந்த மறைவேதம்
புர்கானைத் தினமோதுமே உள்ளம்!
பாங்கோசை நாமும் செவி கேட்டிட
பாதங்கள் விரைந்தோடும் தொழுதிட!
படைத்தவனை தொழுதிடவே நாமும்
புனிதராக்கிடும் இறைதியானம் தினமும்!
பகிர்ந்து கொடுத்திடுவோம் தர்மம்
புசித்திடுவார் ஏழைகளும் இன்பம்!
புன்னகையில் முகமலர்வதும் தர்மம்
படைத்தவன் தந்திடுவான் சுவனம்!
பரிவுடன் பகிர்ந்துகொள் ஏழைவரி
படைத்தோன் நரகத்தை மூடும்வழி!
பற்றிக்கொள் சர்தார் நபிவழி
படைத்தவனிடம் உனக்கானது சுவனவழி!